சசிகாந்தின் சகோதரர் ஸ்ரீகாந்த் (30) வீட்டில் தனக்குரிய பங்கை பிரித்து தருமாறு கேட்டு சண்டையிட்டு வந்தார்.
இதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் நேற்றுமுன்தினம் குடித்துவிட்டு வந்து ஆர்த்தியிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த அவர், தான் வைத்திருந்த கத்தியால் ஆர்த்தியை முதுகு, தலை, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த ஆர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த்தை கைது செய்தனர்.