உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில்,  உ.பி.யின் மெயின்புரி பகுதியில் நடைபெற்ற  சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.