குஜராத்தில், விபத்திலிருந்து மூவரதப்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 11ஆம் தேதி கிர் சோமநாத் பகுதியில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென சாலை சந்திப்பில் நின்றது. விறுவிறுவென பின்நோக்கி இயக்கப்பட்ட அந்த கார், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மீது மோத இருந்தது.

சுதாரித்துக் கொண்ட இருசக்கர வாகன பயணிகள் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினர். காரை பின்நோக்கி இயக்கி திருப்ப முயலும் போது, மீண்டும் அந்த இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் மீது மோதியது.

மோட்டார்சைக்கிளையும் தரதரவென சிறிது நேரம் இழுத்த அந்த கார் ஓட்டி, புழுதிபறக்க அங்கிருந்து தப்பிச் சென்றார்.