டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சி.ஐ.டி.யு-எல்.பி. எப். சார்பில் பணி வரன் முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திட வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சி.ஐ. டி.யு. ஊழியர் சங்க கவுரவ தலைவர் கா.கந்தசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் அப்பாசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், டாஸ்மாக் ஊழியர் சங்க பிரதிநிதிகள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், பத்மஸ்ரீகாந்தன், ராஜேஸ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதில் அரசு ஊழியர்களுக்கு இணையான கால முறை ஊதியம், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.