ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே வாங்கும் நடிகை..! போட்டிபோடும் தொழிலதிபர்கள்..!

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் என்று தனது ரேட்டை குறைத்துள்ளார்.

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்யாகிருஷ்ணன். தற்போது வயதாகிவிட்டதால் கவுரவ வேடங்கள், அம்மா, அண்ணி வேடங்களில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார்.

தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ரம்யாகிருஷ்ணனுக்கு கிடைத்த வாய்ப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் முடிவு செய்துள்ளனர்.

Image result for ரம்யாகிருஷ்ணன்ஏற்கனவே சன் டிவி சீரியல்களில் நடித்த போது ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை ரம்யாகிருஷ்ணனுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் ரம்யாகிருஷ்ணனுக்கு ஏதும் வாய்ப்பு வரவில்லை. இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்ற ரம்யாகிருஷ்ணன் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார்.

தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க தனது சம்பளத்தை குறைத்து ரம்யாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி இனி ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று தயாரிப்பாளர்களுக்கு ரம்யாகிருஷ்ணன் தூது அனுப்பி வருகிறார். ஆனால் தற்போது வரை எந்த தயாரிப்பாளரும் ரம்யாகிருஷ்ணனுக்கு ஓ.கே. சொல்லவில்லை.