பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார்.

Image result for nidhi agrawal  hot

இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள்.

Related image

அவரது துறையில் அவரது முன்னேற்றம் அபாரமானது. நான் கிரிக்கெட் வீரராகவும் அவர் பாலிவுட் நடிகையாகவும் இருக்கும் போதே இருவருக்கும் அறிமுகம் உண்டு. ஏதோ நானும் அவரும் மட்டும் தனியாக எங்கும் செல்லவில்லை. இன்னும் 3-4 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். நண்பர்களுடன் செல்வது பிடித்தமானது, ஆனால் வேறு எதுவும் கிடையாது.

Image result for nidhi agrawal kl rahul

அப்படி எனக்கு ஏதாவது உறவு முறை இருந்தால் அதனை நான் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டே பழகுவேன். இதில் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை” என்றார்.

மும்பையில் உள்ள உணவு விடுதியில் ராகுலும் நித்தியும் இருந்ததை பலரும் கண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.