சிங்கப்பூரில் அந்நாட்டு அதிபர் ஹலிமா யாக்கூபை (Halimah Yacob)பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ((Lee Hsien Loong)) வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கூபை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.