தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் படங்கள் மற்றும் வீடியோக்களை விரைவாக அனுப்புவதற்கான வசதியை சேர்த்துள்ளது.

குறிப்பிட்ட நபருக்கு அனுப்புவதற்கான புகைப்படம் அல்லது வீடியோவை கேலரியிலிருந்து தேர்வு செய்த பின் புகைப்படத்தை எடிட் செய்வதற்கான பக்கம் திறக்கும்.

இந்த நிலையிலேயே புகைப்படத்தை வாட்ஸ் ஆப் தனது சர்வரில் பதிவேற்றம் செய்து கொள்ளும். அனுப்புவதற்கான உத்தரவை சொடுக்கியதும், எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பெறுபவரின் எண்ணுக்கு சென்றடையும்.

இதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோவை பதிவேற்றம் செய்வதற்காக காத்திருக்கும் நேரம் குறையும் என வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளது.