தூத்துக்குடியில் 100 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவின் படி 3 சிறப்பு அரசு மருத்துவர்கள், மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மீதமுள்ள இருவரது உடல்கள் இன்று மாலைக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அவர்களது உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் கூறினார்.