புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து வங்கிக் கணக்குகளிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்ட வழக்கில், மேலும் மூவரைக் கைது செய்துள்ள போலீசார் ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார், போலி ஏ.டி.எம். அட்டைகளை தாயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புதுச்சேரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பாலாஜி, ஜெயச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த ஷ்யாம், கடலூரைச் சேர்ந்த கமல், புதுச்சேரி மருத்துவர் விவேக் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளுக்கு உதவியதாக சிவக்குமார், கணேஷ், டேனியல் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் வழக்கின் முக்கிய குற்றவாளியான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ரகுநாதனின் மகன் சந்துரு என்பவரைக் கைது செய்ய 2 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.