காஞ்சிபுரத்தில் இருந்து கடத்திவரப்பட்ட காரை மீட்ட புதுச்சேரி போலீசார், இருவரை கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து இண்டிகா வி 2 கார் ஒன்று மாயமானதாகவும், அது புதுச்சேரி தூமஸ் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சீகல்ஸ் உணவகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மீட்டதோடு, காரை திருடி வந்த இருவரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் சென்னையை சேர்ந்த சையத் சிக்கந்தர் மற்றும் கோபிநாத் என்பதும், காரை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.