பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, எஸ்.வி சேகர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக எஸ்.வி சேகருக்கு உத்தரவிட்டது.