மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்தவர் ஷாலினி பாண்டே. என்ஜினியரிங் படித்து முடித்த பிறகு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடிகையானார். அவர் நடித்த முதல் படமான அர்ஜுன் ரெட்டியே அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் சினிமா, குடும்பம் குறித்து அவர் கூறியதாவது

Related imageஅர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது நரக வேதனையாக இருந்தது என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.

Image result for Shalini Pandeyசினிமாவில் நடிக்கக் கூடாது என்று அப்பா கூறினார். ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேருமாறு வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் எனக்கு படித்த படிப்புக்கு வேலை செய்வதை விட படங்களில் நடிக்கவே விருப்பமாக இருந்தது.

Image result for Shalini Pandeyபெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு மும்பைக்கு கிளம்பி வந்தேன். போ போ போய் தெருவில் பிச்சை எடுக்கப் போகிறாய் என்று என் தந்தை என்னிடம் கூறினார்.

அர்ஜுன் ரெட்டி படம் ஹிட்டானதும் என் குடும்பத்தார் என்னை ஏற்றுக் கொண்டனர். கல்லூரியில் படித்த போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதலில் தோல்வி அடைந்தேன்.

Image result for Shalini Pandeyகாதல் தோல்வியால் கஷ்டப்பட்டபோது தான் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தேன். விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது என் காதல் நினைவுக்கு வந்து நரக வேதனையாக இருந்தது. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நடித்தேன் என்கிறார் ஷாலினி பாண்டே.