கிரானைட் தொழிலில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவது பற்றிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கிரானைட் தொழிலில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவது முழுமையாக குறைக்கப்பட்டு விட்டதாக அந்தந்த மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் கருத்தரங்கில் கூறின.

கடந்த சில ஆண்டுகளாக கிரானைட் தொழிலில் குழந்தைள் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன. மேலும், குழந்தைகளை கிரானைட் தொழிலில் ஈடுபடுத்தினால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் எச்சரித்துள்ளன.