காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சியடையவில்லை.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு 53கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்தைப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சோதனை முடிவுக்கு எதிராக அவர் ஊக்கமருந்துக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் முறையிடலாம்.

அதிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டால் தங்கப்பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்படும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் 26தங்கப் பதக்கங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.