குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் தள்ளப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஹைதராபாத் நகர காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சுமார் 72 குற்றவாளிகளின் குடும்பங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர்.

குழந்தைகளைப் படிக்க வைக்கவும் முதியவர்களுக்கு உடல் நல சிகிச்சையளிக்கவும் மன ரீதியான பாதிப்புகளைக் களைய ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றம் செய்து சிறை சென்ற பலரின் குடும்பத்தினர் படிப்பறிவில்லாமல் வறுமையிலும் உழல்கின்றனர்.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இத்தகைய குடும்பங்களுக்கு சமூகத்தில் யாருமே ஆதரவு அளிப்பதில்லை.

இதனால் இத்தகைய நலப்பணிகளை தொடங்கியிருப்பதாக தெலுங்கானா மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.