கரூர் அருகே லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.கோவையிலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கோவை கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு அருகே வந்தபோது முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தை முந்த , அரசு பேருந்தின் ஓட்டுனர் முயன்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த சிமெண்ட் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.