திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் மட்டும், 86 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், மே மாதம் ஏழுமலையான் கோயிலில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், அவர்கள் 86 கோடியே 46 லட்சம் ரூபாயை உண்டியலில்  காணிக்கை செலுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.

ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோல்மாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 49 ஆயிரத்து 60 டிக்கெட்டுகள் இன்று முதல் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அணில்குமார் சிங்கால் தெரிவித்தார்.