சட்டமன்றத்தில் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தென்னம்பாளையிலிருந்து நீரா பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் வகைசெய்யும், தமிழ்நாடு நீரா விதிகள் 2017 பற்றிய அறிவிக்கையையும் வெளியிட்டார்.

மேலும், தென்னை உற்பத்தி நிறுவனங்களிலுள்ள விவசாயிகளுக்கு நீர் வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு பயிற்சி வழங்கும் என்றும், குளிர்பதன அலகுகள், இயந்திரங்கள் அமைக்கவும், நீரா பானம் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் அரசு உதவிபுரியும் என்றும் முதலமைச்சர் கூறினார். இதன்மூலம் தென்னை விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும் முதலமைச்சர் கூறினார்.