புதுச்சேரியில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

பெரிய மார்க்கெட்  பகுதியிலுள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து  அதிகாரிகள், 10க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.