மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நாளை தூத்துக்குடி செல்கின்றனர்.  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்கின்றனர்.

போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.