தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கந்தையா என்பவரது உடல், மறு பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . சண்முகம், செல்வசேகர், கார்த்திக் ஆகியோரது உடல்கள் ஏற்கனவே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களில் 7பேரின் உடல் மறுபிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாந்த் பத்ரா அடங்கிய மருத்துவர்கள் குழு மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.