ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் அர்பாஸ் கானுக்குத் தானே காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Image result for அர்பாஸ் கானுக்குஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பாக மும்பை புறநகர்ப் பகுதியான டோம்பிவிலியில் காவல்துறையினர் ஆய்வு நடத்தி இருவரைக் கைது செய்தனர். அவர்களைக் கல்யாண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது சூதாட்டக் கும்பல் தலைவனான சோனு ஜலானைக் கைது செய்தனர்.

Image result for அர்பாஸ் கானுக்குஅவனிடம் விசாரித்ததில் இணையத்தளத்தில் சூதாட்டம் நடத்தியதும், அதில் ஏராளமானோர் பணம் கட்டியதும் தெரியவந்தது. இந்தச் சூதாட்டத்தில் சல்மான் கானின் தம்பியும் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கானும் பணம் கட்டி ஏமாந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க அர்பாஸ் கானுக்குத் தானே காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அர்பாஸ் கான் ஐபிஎல் சூதாட்டத்தில் 2கோடியே எண்பது லட்ச ரூபாய் தோற்றுவிட்டதாகவும், இது தொடர்பாக சோனு ஜலான் அர்பாஸ் கானுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.