18 வயது வாலிபரும், 19 வயது இளம்பெண்ணும் இணைந்து வாழ அனுமதி வழங்கிய கேரள ஐகோர்ட்டு, திருமணம் ஆகாமல் இணைந்து வாழும் உறவு முறையில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என கூறிஉள்ளது.
வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.
இளம்பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்து இளம் ஜோடியை பிரிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி. சிதம்பரேஷ் மற்றும் கேபி ஜோதிந்திரநாத் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு பெஞ்ச், “சமுதாயத்தின் மரபுசார்ந்த பிரிவினருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், எல்லையை கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம் வயது வந்த ஆணும், பெண்ணுக்குமான தடையற்ற உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது.
வாலிபருடன் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது, வாலிபர் திருமண வயதை அடைந்த பின்னர் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் செய்யலாம்,” என கூறிஉள்