ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியுள்ளார்.
மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.