வங்கி கடன்பெற்று மோசடியில் ஈடுபட்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் நான்காயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம், பல்வேறு வங்கிகளில் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன இயக்குநர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா ஆகியோரின் நான்காயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று கையகப்படுத்தியுள்ளது