இன்று நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘தமிழ்ப் படம் 2.0’ படத்தின்  டீசர் வெளியானது.
Image result for tamil padam 2.0 teaser
நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப் படம்’. இப்படம் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களையும் அவர்களது படங்களையும் கலாய்க்கும் விதமாக எடுக்கப்படும் Spoof திரைப்படங்கள் பாணியில் தமிழில் முதன்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கலாய்த்து எடுக்கப்பட்டது.

Image result for tamil padam 2.0 teaser

இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவிற்கு புதிது என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017ம் ஆண்டின் இறுதியில் தமிழ்ப் படத்தின் இரண்டாம் பாகம் ‘தமிழ்ப் படம் 2.0’ பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன் பிறகு இந்த வருட ஆரம்பத்தில் வெளியான தமிழ்ப் படம் 2.0 படத்தின் போஸ்டர்களில் அரசியல்வாதிகளையும் விட்டுவைக்காமல் கலாய்த்திருந்தனர். அவை சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகின.

Image result for tamil padam 2.0 teaser

இந்நிலையில் இப்படத்தின் டீசரை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழ்ப்படம் 2.0 டீசரானது இன்று காலை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்ப் படத்தின் முதல் பாகத்தைப் போலின்றி இரண்டாம் பாகமான இதில் முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி சிறிய நடிகர்கள் வரை பலரையும் கலாய்த்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.