தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினிகாந்த் கூறினால் மு.க.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் எதற்காக கோபம் வருகிறது என்று  கேள்வி எழுப்பியுள்ளார். சமூக விரோதிகளுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ரஜினிகாந்த் கூறிய கருத்து துணிச்சலானது என்றும் சமூக விரோதிகளை அடையாளம் காட்ட கேட்கும் மு.க.ஸ்டாலின் சமூக விரோதிகள் இப்போராட்டத்தில் ஊடுருவவில்லை என்று உறுதியளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

மாதிரி சட்டமன்றம் நடத்திய மு.க.ஸ்டாலின் அதிலிருந்து கூட வெளிநடப்பு செய்துவிடுவாரோ என தாம் அஞ்சியதாகவும் தமிழிசை சவுந்திரராஜன் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.