முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது, தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடிமக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.