பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனம் கொண்டுவரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 4ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.

மாணவர்களின் கல்வி தரத்தையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பள்ளி துவங்கும் 15 நிமிடத்திற்கு முன்பு பள்ளிக்குள் வரவேண்டும், லோ ஹிப் , டைட் பாண்ட் அணிந்து வரக்கூடாது, பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போன் , இருசக்கர வாகனம் கொண்டு வரக்கூடாது, பிறந்த நாளிலும் பள்ளி சீருடை அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுக்கவோ, தனியார் பள்ளிகளில் வகுப்பு எடுக்கவோ கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.