மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் மணி ரத்னம் இயக்கத்தில்  அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Image result for dayana erappa

இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Image result for dayana erappa

இந்தப் படட்தில் நடிக்க தற்போது புதிதாக இணைந்திருப்பவர், பிரபல மாடலும், மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்று வரை வந்த டயானா எரப்பா என்பவர்தான். டயானா கிங்பிஷ்ஷர் காலெண்டர் உள்பட பல விளம்பரங்களில் நடித்து வருபவர், பாலிவுட்டில் சில படங்களில் கேமியோ காட்சிகளில் தோன்றுகிறார். செக்கச் சிவந்த வானத்திலும் இந்த நட்சத்திரம் சிறியதாக மின்னவிருக்கிறது என்றனர் படக்குழுவினர்.