நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்,தூத்துக்குடியில் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 22 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, சிப்காட் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.