மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்,தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதாக  தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

பெட்ரோலிய பொருட்களில் கிடைக்கும் வரி பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறிய ராஜ்யவர்தன் ரத்தோர், மாநில அரசு வரியை குறைக்க முன்வருவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.