தடுப்பணை உடைப்பால்,  கோவை மாவட்டம் சூலூர் அருகே மழைநீர் வீணாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், செங்கத்துறை தடுப்பணையின் ஒருபகுதி உடைந்தது. தடுப்பணையை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், சேதமடைந்த பகுதி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி பயனற்றுப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த தடுப்பணை மூலம், செங்கத்துறை, காடாம்பாடி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் பயன்பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.