குடும்பத் தகராறில் சென்னை அம்பத்தூர் அருகே  மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – மதுமிதா தம்பதியர் தனியார் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வெங்கடேசன் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. காலை வழக்கம்போல ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியால் மதுமிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் மதுமிதா உயிரிழந்துவிட, உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை நிகழ்வுக்கு சற்று முன்பு மதுமிதா பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணிடம் பேசிவிட்டுச் செல்லும் காட்சிகளும் கத்தியால் குத்தப்பட்ட பின்னர் அவரது சகோதரர் அவரை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.