33 லட்சம் பணம்  சென்னையில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பைனான்சியரை கடத்தி பணம்  பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மோகன், வடபழனியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மோகனிடம் தன்னை சரவணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் முக்கியப் பிரமுகருக்கு பெரும் தொகை தேவைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்.

ஆனால் மோகனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்திய சரவணன், மோகனின் உறவினர்களிடம் இருந்து 33 லட்சம் ரூபாயையும், 28 சவரன் நகையையும் பறித்தார். போலீசாரின் விசாரணையில் கடத்தல் கும்பல், கிருஷ்ணராஜ் என்பவனை சரவணன் என்ற பெயரில் மோகனிடம் பழகச்செய்து திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. கிருஷ்ணராஜை போலீசார் தேடிவந்த நிலையில் அவன் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.