மதுரை அரசு மருத்துவமனையில் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில்  கொல்லப்பட்ட மூவரின் உடல்களும்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 20லட்ச ரூபாய் நிதியுதவி, சிபிசிஐடி விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடல்களை வாங்க மறுத்துக் கச்சநத்தம் மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 4நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று பேச்சு நடத்தினர். இதில் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாக அறிவித்ததை அடுத்துப் போராட்டத்தைக் கைவிடுவதாக மக்கள் அறிவித்தனர். இதையடுத்து 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் கச்சநத்தத்துக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.