முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட அரசாணை சட்டப்படி செல்லும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஸ்டெர்லைட் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் மேற்கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதே போல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.