கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர்  ஜேசா.
இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.எப்போதும் கல்லூரிக்கு முடிந்தவுடன் உடனே வீட்டிற்கு வந்து விடுவார்.
இவர் மார்ச் 22ம் தேதி அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றிருக்கிறார் அன்றிலிருந்து ஜேசாவை  காணவில்லை.
இது குறித்து பத்தானம் திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை  தேடி வந்தனர். 50 நாட்கள் ஆன பின்னும் இவ்வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததை அடுத்து ஜேசாவை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு தொகை அறிவித்தது கேரளா போலீஸ்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகில் உள்ள பழவேலி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கேரளாவில் காணாமல் போன ஜேசாவின் அங்க அடையாளங்கள் சில இறந்த சடலத்துடன் ஒத்து போவதால் அது ஜேசாவாக இருக்கலாம் எனக் கருதிய காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கேரளா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதன் அடிப்படியில் கேரளா போலீசார் செங்கல்பட்டு வந்து விசாரணை மேற்கொள்கின்றனர். 50 நாட்களாக பதிலேதும் கிடைக்காத மாணவி ஜேசா வழக்கு தற்போது ஏற்பட்டுள்ள திருப்பு முனையால் பரபரப்பாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.