குமரியின் தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் 51வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்காக போராடிய மார்ஷல் நேசமணியின் நினைவுநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது 51வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.