இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று  வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

BrandZ என்ற தனியார் அமைப்பு ஒன்று உலகாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களை அலசி ஆராய்ந்து பிராண்டிங் தொடர்பான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

தற்போது உலகின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலை BrandZ வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

BrandZ வெளியிட்டுள்ள உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இந்தியவின் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி 9வது இடம் பெற்றுள்ளது.

இப்பட்டியலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உலகின் முன்னணி ஆட்டொமொபைல் நிறுவனமான வோக்ஸ்வேகனை பின்னுக்குதள்ளியுள்ளது மாருதி நிறுவனம். இப்பட்டியலில் வோக்ஸ்வேகன் நிறுவனம் 10வது இடமே பெற்றுள்ளது.

மாருதி நிறுவனத்திற்கு நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயர் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்தது, அதுவே அந்நிறுவனத்தை நம்பகத்தனமான முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக இந்தியர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது.

இருப்பினும் மாறி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற சொகுசு கார் மாடல்களை களமிறக்க இந்தப்பெயர் அந்நிறுவனத்திற்கு தடையாக இருந்தது. அதனை தகர்க்கும் வண்ணம் NEXA என்ற பெயரிலான தொடர் ஷோரூம்களை அந்நிறுவனம் தொடங்கியது, இதன் மூலம் எஸ்யூவி ரக கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது.

Image result for world top 10 cars company maruti suzuki

மாருதி நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமை NEXA ஷோரூம்களையே சேரும் என்று ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்தவர்கள் கூறிவந்த நிலையில் தற்போது முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனங்களுக்கான டாப்-10 பட்டியலில் மாருதி நிறுவனம் இடம்பெறச் செய்த பெருமையும் NEXA ஷோரூம்களையே சேரும் என்று BrandZ தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், மாருதி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸாவிற்கும் இந்தச் சாதனை மகுடத்தில் பங்கு உள்ளதாக  BrandZ தெரிவித்துள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து 6வது ஆண்டாக ஜப்பானைச் சேர்ந்த Toyota நிறுவனம் பிடித்துள்ளது.

Image result for world top 10 cars company toyota

2வது மற்றும் 3வது இடங்களை ஜெர்மானிய நிறுவனங்களான Mercedes Benz மற்றும் BMW பெற்றுள்ளது. 4வது இடத்தில் அமெரிக்க நிறுவனமான Ford, 5வது மற்றும் 6வது இடத்தில் ஜப்பானிய நிறுவனங்களான Honda மற்றும் Nissan பெற்றுள்ளது.

Image result for world top 10 cars company benz

இதைத்தொடர்ந்து ஜெர்மனைச் சேர்ந்த Audi நிறுவனம் 7வது இடத்தையும், அமெரிக்காவின் Tesla 8வது இடத்தையும், இந்தியாவின் மாருதி சுசுகி 9வது இடத்தையும், 10வது இடத்தை வோக்ஸ்வேகன் நிறுவனமும் பெற்றுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.