கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இன்று  திறக்கப்பட இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கிய கோடை விடுமுறை நேற்றுடன்  முடிவடைந்தது.

மாநிலம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவும், வாகனங்களை சரியாக பராமரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.