தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்’ படத்தின் அடுத்த பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

படம் மே 25-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக ரஜினியின் 2.0 படத்தை கிண்டல் செய்யும்படியாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.