உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்த் தாக்கம் இந்தியாவில் 2000-மாவது ஆண்டில் 19 புள்ளி 4 சதவீதமாக இருந்த நிலையில் அது 2005-ல் 11 புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2020-ஆம் ஆண்டில் 9 புள்ளி 8 ஆகவும், 2025-ல் 8 புள்ளி 5 ஆகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தல் தொடர்பான நோய்த் தாக்கக் குறைவு விகிதம் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் குறைவாகவே இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.