தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு  விவசாய நிலங்கள் வழியாக புறவழிச் சாலைகள் அமைப்பதை கண்டித்து, குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். நாரயணசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால் வரவேற்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரங்கசாமி பேசும்போது, அன்னூரில் விவசாய நிலங்களை அழித்து புறவழிச் சாலை அமைக்காமல் உயர்மட்ட பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிககை எடுக்க வேண்டும்.

எனவே தற்போது விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ள கற்களை அகற்ற வேண்டும். புறவழிச் சாலை அமைக்க முற்பட்டால் அதை தமிழக விவசாய சங்கம் விவசாயிகள் குடும்பத்துடன் வந்து தடுப்போம் இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நித்யானந்தம், சாமிநாதன், பூபாலன், ஆதிலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.