சிவகங்கை அருகே உயிரிழந்தோர் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு!

தமிழக அரசு,கச்சநத்தம் படுகொலைகளில் கொல்லப்பட்டு உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவகங்கையை அடுத்துள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், கடந்த திங்கள்கிழமை இரவு, குறிப்பிட்ட பிரிவினர், மற்றொரு பிரிவைச் சேர்ந்த 9 பேரை வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டினர். இதில், சண்முகநாதன், மருது மற்றும் ஆறுமுகம் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

சென்னையில் பூட்டை அறுத்து கொள்ளையடித்த பிளம்பர் கைது!

வீட்டின் பூட்டை உடைத்து சென்னை நங்கநல்லூரில் நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை, 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்துள்ளனர். நேரு நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, புது வீடு கட்டுவதற்காக பழைய வீட்டை இடித்து விட்டு அருகே உள்ள சிறிய அறையில் பொருட்களை வைத்துள்ளார். அங்கிருந்த பீரோவில் 100 சவரன் நகைகள் கொள்ளை போனதாக, பழவந்தாங்கல் போலீசில் வியாழனன்று காலை அவர் புகார் அளித்தார். அங்கு ஆய்வு செய்த தனிப்படை போலீசார், 65 சவரன் நகைகள் வீட்டிலேயே இருந்தது … Read more

மாணவர்களுக்கு நற்செய்தி: 90 ஆயிரம் இலவச பேருந்து அட்டைகள் வழங்கல் ..!

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் பேருக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் (2017-18) அரசுப் பள்ளி, கல்லூரி, … Read more

ரயில் விபத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் பலியாகின்றனர் ..!

இந்திய ரயில் பாதைகளில் நடைபெறும் விபத்துகளில் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ரயில் விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை, மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் ரயில் விபத்துக்களில் பலியாவோர் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், 2014-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை 23 ஆயிரத்து 13 பேர், ரயில் விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக … Read more

நாள் முழுக்க ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க யார் காரணம் என்பது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க தி.மு.க.தயார் ! மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க தயாராக இருப்பதாக  கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு அறைகுறையானது என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையை கூட்டி, எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது குறித்து, சட்டமன்றத்தில் நாள் முழுவதும் கூட விவாதிக்க திமுக உறுப்பினர்களும், … Read more

சென்னை அணியில் முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிக்கு காரணம் ..!

ஐபிஎல் தொடரில் ஆடும் அணிகளில் ஆட்டம் தொடர்பான விவகாரங்களில் உரிமையாளர்களின் தலையீடு இருப்பதை கவுதம் காம்பீர் விமர்சித்துள்ளார். இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் காம்பீரின் தலைமையில் களம் கண்டது. கொல்கத்தா அணிக்கு இரண்டுமுறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றி கேப்டனான காம்பீரின்  ஆட்டம் இந்த முறை எடுபடவில்லை. கேப்டனாகவும் வீரராகவும் சோபிக்காத காம்பீர், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு … Read more

கதையின் தேவைக்காக அரை நிர்வாணக் காட்சி இடம் பெற்றுள்ளது -​’x வீடியோஸ்’ இயக்குநர் சஜோ

இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது நாளை ஜூன்-1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படம் … Read more

மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்கிறது! ராஜ்நாத் சிங்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,எரிபொருள் விலை உயர்வு பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தின் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக  விளக்கமளித்துள்ளார். அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அதனால் பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லை என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய … Read more

தங்கக்கவச முறைகேடு விவகாரம்: முன்ஜாமீன் கோரிய முத்தையா ஸ்தபதியின் மனு முடித்துவைப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்,திருத்தணி முருகன் கோயில் விமான தங்கக்கவச முறைகேடு விவகாரத்தை முன்வைத்து, முத்தையா ஸ்தபதி முன்ஜாமீன் கோரிய மனுவை  முடித்து வைத்தது. இதுகுறித்து முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்திருந்த மனுவில், திருத்தணி முருகன் கோயிலில் மூலவர் விமானத்துக்கு தங்கக்கவசம் செய்யும் பணியில், பல கிலோ தங்கம் முறைகேடு செய்ததாக தன் மீது குற்றம்சுமத்தப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பணிகளில் தாம் தலையிடவே இல்லை என்று குறிப்பிட்டிருந்த முத்தையா ஸ்தபதி, தாம் கைதாகக் கூடும் என்பதால், முன்ஜாமீன் வழங்குமாறு … Read more

கர்நாடகத்தில் அமைச்சர் பதவி ஒதுக்கீடு முடிந்ததாக தகவல்!

மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு நிதித் துறை என்றும் காங்கிரசுக்கு உள்துறை என்றும் கர்நாடக அமைச்சரவையில் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமியும் துணைமுதலமைச்சராகக் காங்கிரசின் பரமேஸ்வராவும் பதவியேற்றுள்ளனர். இரு கட்சிகளுக்கு இடையில் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முதன்மையான துறைகளின் அமைச்சர் பதவியைப் பெறுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பல கட்டப் பேச்சுக்களுக்குப் பின் நிதித்துறையை மதச்சார்பற்ற ஜனதாதளம் வைத்துக் கொள்வது என்றும், உள்துறையை காங்கிரஸ் … Read more