சத்துருதீன் இவர் பெங்களூரு தலக்கெட்டுபுரா சரகத்திற்குட்பட்ட மல்லசந்திரா பூர்வாங்கா குடியிருப்பின் 10வது மாடியில் பெற்றோருடன் வசித்து வந்தார் . தனியார் கல்லூரியில் பியூசி 2ம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் பியூசி தேர்வு முடிவுகள் வெளியானதில், சத்துருதீன் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் நொந்து காணப்பட்ட அவர், தற்கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு தூங்கச் செல்வதாக கூறி தனது அறைக்கு சென்ற சத்துருதீன், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சத்துருதீனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலக்கெட்டுபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.