சவுதியில் ராணுவ தளத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சவுதி ஊடகங்கள்,  ‘சவுதியில் மெக்காவிலிருந்து 70 கிலோமீட்ட்ர தொலைவில் அமைந்துள்ள தைஃபிலுள்ள ராணுவ தளத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் இன்று (புதன்கிழமை) தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி பலியானார். பலர் காயமடைந்தனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தப்பி சென்று விட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் இந்தத் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சவுதி ராணுவ அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.