இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.

கர்நாடகா ஆர்.ஆர். சட்டப்பேரவை தொகுதி:

ஆர்.ஆர். சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா வெற்றி பெற்றுள்ளார். ராஜராஜேஸ்வரி தொகுதியில் 41,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் முனி ரத்னா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.