சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. மேலும் அவர் அரசியல் நோக்கத்திற்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

மேலும் அடுத்து அவர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. காலா படம் போல அதிலும் அரசியல் இருக்குமா என்று பேச்சு தற்போதே அடிபடுகிறது.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், “ரஜினியை வைத்து படம் இயக்கவேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சியை தந்தாலும், அவரை எப்படி வித்தியாசமாக காட்ட போகிறேன் என்கிற வருத்தமும் இருக்கிறது.”

“இந்த படத்தில் துளி கூட அரசியல் இருக்காது. இப்போதைக்கு விஜய் சேதுபதி மட்டும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார் என வந்த தகவல்கள் பொய்” என கார்த்திக் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.